Regional03

சிறுமியிடம் அத்துமீறியவர் போக்ஸோவில் கைது :

செய்திப்பிரிவு

திருப்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி, பிளஸ் 1 படித்து வருகிறார்.கரோனா காலத்தில் தந்தையின்நண்பர் சரவணன் (37) என்பவரின் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் வேலைக்கு சென்ற போது சிறுமியிடம், சரவணன் அத்துமீறியுள்ளார். இதையறிந்த பெற்றோர், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், சரவணன் மீது போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

SCROLL FOR NEXT