அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு நேற்று கொசுவலைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்கள். 
Regional03

கொசு வலைக்குள் அமர்ந்து வார்டு உறுப்பினர்கள் தர்ணா :

செய்திப்பிரிவு

அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 4 பேர், ஊராட்சி அலுவலகம் முன்பு கொசு வலைக்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊராட்சிப் பகுதிகளில் கொசுமருந்து அடிப்பதில்லை. வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் நடைபெறவில்லை. வார்டு உறுப்பினர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,’’ என்றனர்.

SCROLL FOR NEXT