Regional01

தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 11 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வள்ளலார் வீதி, கொங்கு நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். ஜவுளி வியாபாரி.

இவரது மனைவி மல்லிகா. நேற்று முன்தினம் மல்லிகா வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர், கத்தியைக் காட்டி மிரட்டி, பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கத்தைப் பறித்துச் சென்றார்.

பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அருகாமையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT