Regional01

நிற்காமல் சென்ற அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு :

செய்திப்பிரிவு

திண்டிவனம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.

திண்டிவனம் ‌அருகே கீழ்எடை யாளம் கிராமத்தில் நேற்று காலைபள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்து நிறுத்தத் தில் காத்திருந்தனர். அப்போது காலை 8.35 மணிக்கு நல்லாமூர் கிராமத்திலிருந்து திண்டிவனம் செல்லும் அரசு பேருந்து வந்தது. மாணவர்கள் கைகாட்டியும் பேருந்து நிற்கவில்லை. இதனால்ஆத்திரமடைந்த மாணவர்கள் பேருந்தின் மீது கல்லை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதுகுறித்து மயிலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT