Regional03

எலியட்ஸ் கடற்கரையில்15 டன் கழிவு அகற்றம் :

செய்திப்பிரிவு

சென்னையில் கடந்த பல நாட்களாக பெய்த மழையால் கால்வாய்களில் அடித்து வரப்பட்டகுப்பை, கழிவுகள் கூவம், அடையாறு ஆகியவற்றில் கலந்து, கடலுக்குச் சென்றன. அவ்வாறுசென்ற கழிவுகள் எலியட்ஸ் கடற்கரையில் ஒதுங்கின.இதனால் அப்பகுதியில் துர்நாற்றமும் வீசியது.

எலியட்ஸ் கடற்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதி என்பதாலும், கடல் ஆமைகள் முட்டையிடும் காலம் என்பதாலும், அங்கு குவிந்த சுமார்15 டன் கழிவுகளை மாநகராட்சிப் பணியாளர்கள் அகற்றினர்.அவை மறுசுழற்சிமையங்களுக்கு அனுப்பப்பட்டன.

SCROLL FOR NEXT