Regional01

காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி தொடக்க விழா :

செய்திப்பிரிவு

காந்தி சிந்தனைக் கல்லூரி சார்பில் இணைய வழியில் காந்திய சிந்தனைச் சான்றிதழ் பட்டயப் படிப்பு தொடக்க விழா நடந்தது.

மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆரோக்கிய பிரசில்லா வரவேற்றார். காந்திய சிந்தனைப் பாடத்திட்டம் குறித்து பேராசிரியை ஜான்சி வனிதாமணி விளக்கினார்.

காந்திய சிந்தனை பற்றி காந்தி சிந்தனைக் கல்லூரி முதல்வர் முத்துலெட்சுமி பேசினார். காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலாளர் கே.ஆர்.நந்தாராவ் வாழ்த்துரை வழங்கினார்.

பொறியாளர் சரலா கண்ணன், காந்தி நினைவு அருங்காட்சியகக் கல்வி அலுவலர் ஆர்.நடராஜன், மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரி மாணவியர் கலந்துகொண்டனர்.

உதவிப் பேராசிரியை மீனாம்பாள் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT