Regional01

கஞ்சா கடத்திய ராஜஸ்தான் நபருக்கு 10 ஆண்டு சிறை :

செய்திப்பிரிவு

திண்டுக்கல்- குமுளி சாலையில் கடந்த ஆண்டு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் வாகனச் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தில் கஞ்சா கடத்திய ராஜஸ்தானைச் சேர்ந்த உக்கம்சந்த் உமாபத்(36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய் யப்பட்டது. இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதி மன்றத்தில் நடந்தது.

இதில் உக்கம்சந்த் உமா பத்துக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி புளாரா தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT