Regional01

மதுரை-மானாமதுரை ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் நாளை ஆய்வு :

செய்திப்பிரிவு

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை - மானாமதுரை இடையே 47 கி.மீ. அகல ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு தயாராக உள்ளது. இந்த வழித்தடத்தில் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்பாதையில் நாளை (டிச.5) பெங்களூரு தெற்கு சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு செய்கிறார்.

மதுரையில் இருந்து காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இந்த ஆய்வு, மானாமதுரையில் பிற்பகல் 1.30 மணிக்கு நிறைவு பெறும். பின்னர் மானாமதுரையில் இருந்து மதுரை வரை ரயில் சோதனை ஓட்டம் பிற்பகல் 2.30-க்குத் தொடங்கி மதுரையில் பிற்பகல் 3.15 மணிக்கு நிறைவு பெறும். அதன் பிறகு பயணிகள் ரயில்களை இயக்க தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளிப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT