விருதுநகர் அருகே மீசலூரில் உயர்மின் கோபுரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 
Regional02

உயர் மின் கோபுரத்தில் ஏறி - விருதுநகர் அருகே விவசாயிகள் போராட்டம் :

செய்திப்பிரிவு

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழக விவசாயிகள் போராட்டக்குழு மற்றும் தமிழக விவசாயிகள் நாராயணசாமி நாயுடு நலச்சங்கம் சார்பில் விருதுநகர் அருகே மீசலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ரெங்குதாஸ் முன்னிலை வகித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் கொடுத்த 700 விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் மாத வாடகை வழங்கக் கோரி உயர் மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் போது விவசாயிகள் தமிழக அரசையும் மின் வாரியத்தையும் கண்டித்து முழக்கமிட்டனர். மேலும், தங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அரசு உயர்த்தி வழங்கவில்லையெனில் விரைவில் அடுத்த கட்ட போராட்டமாக உயர் மின் கோபுரத்தின் மீது குடியேறும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT