Regional03

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் மரணம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் முரளி (15). 9-ம் வகுப்புபடித்து வந்தார். ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ளஇவருடைய நண்பர் அஜித்தின் வீட்டுக்குள் தேங்கி கிடந்த மழைநீரை மின்சார மோட்டார் வைத்து அகற்றியுள்ளனர். அப்போது அஜித்தை பார்க்க அங்கு சென்ற முரளி எதிர்பாராத விதமாக மின்மோட்டார் வயரை தொட்டதால் அவர்மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகியது. தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டுசென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

SCROLL FOR NEXT