கலசப்பாக்கத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்ட புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்எல்ஏ சரவணன். 
Regional03

கலசப்பாக்கம்-புதுச்சேரிக்கு புதிய பேருந்து சேவை :

செய்திப்பிரிவு

கலசப்பாக்கம் தொகுதியில் இருந்து புதுச்சேரிக்கு முதல் முறையாக அரசுப் பேருந்து சேவையை தொடங்கிவைத்து சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் 5 கிலோ மீட்டர் பயணம் செய்தார்.

கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம் கிராமத்தில் இருந்து ஆதமங்கலம்புதூர், சிறுவள்ளூர், சேங்கப்புத்தேரி, வில்வாரணி, கலசப்பாக்கம், திருவண்ணாமலை வழியாக புதுச்சேரி வரை புதிய பேருந்து சேவைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்ரமணியம் மற்றும் அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

SCROLL FOR NEXT