ஆவின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி உட்பட 3 ஐஏஎஸ்அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
பேரிடர் மேலாண்மை இயக்குநராக இருந்த என்.சுப்பையன், ஆவின் மேலாண் இயக்குநராகவும், அந்த பதவியில் இருந்த கே.எஸ்.கந்தசாமி, பேரிடர் மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெ.இன்னசன்ட் திவ்யா,தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.