Regional02

நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை தின விழா :

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்ட 31-வது தமிழ்நாடு தேசிய மாணவர் படை கமாண்டர் கர்னல் சீனிவாசன்உத்தரவுப்படி, உதகை அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர்படை தின விழா நேற்று நடைபெற்றது.

தேசிய மாணவர் படை அலுவலர் சுப்ரமணியன் தலைமையில், அருகே உள்ள கிராமங்களுக்கு மாணவர்கள் சென்று கரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், முககவசம் அணியவேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென வீடு, வீடாகசென்று அறிவுறுத்தினர். மேலும், சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினர். அதைத்தொடர்ந்து பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டதுடன், சுற்றுவட்டாரபகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்தனர். பள்ளித் தலைமையாசிரியர் அசோக்குமார், சுபேதார் சசிகுமார், கண்காணிப்பாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT