Regional02

பசுந்தேயிலை கிலோ ரூ.14.62 நிர்ணயம் :

செய்திப்பிரிவு

தேயிலை வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நீலகிரி மாவட்டத்தில் சிறு விவசாயிகளிடம் இருந்து தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யும் பசுந்தேயிலைக்கான விலையை மாதந்தோறும் இந்திய தேயிலை வாரியம் நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில், டிசம்பர் மாதத்தில் கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.14.62 வழங்க வேண்டுமென, தேயிலை வாரியம் நிர்ணயம் செய்துள்ளது.

இந்த குறைந்தபட்ச விலையை தொழிற்சாலைகள் முறையாக வழங்குகிறதா என்பதை தேயிலை வளர்ச்சி வாரிய அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குநர்கள் கண்காணிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT