Regional01

நீதிமன்ற உத்தரவு : தலைமைச் செயலர் : அவசர ஆலோசனை :

செய்திப்பிரிவு

நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து தொடர்புடைய அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழக அரசு தலைமைச் செயலரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்" என்று எச்சரித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நேற்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT