கடலூர் அருகே வெள்ளக்கரையில் வனத்துறையினர் ஊருக்குள் நுழைந்த முதலையை பிடித்தனர். 
Regional02

கடலூர் அருகே ஊருக்குள் நுழைந்த முதலை பிடிபட்டது :

செய்திப்பிரிவு

கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மழைநீர் குட்டையில் நேற்று முன்தினம் இரவு ஒரு முதலை ஒன்று படுத்திருந்தது.அந்த வழியாக சென்ற கிராம மக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து கடலூர் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூர் வனசரகர் அப்துல் ஹமீது தலைமையில் வனவர் குணசேகர், வனத்துறை பணியாளர்கள், வன ஆர்வலர் செல்லா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.பொதுமக்கள் உதவியுடன் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் 150 கிலோவும் சுமார் 5 அடி நீளமும் உள்ள முதலையை பிடித்தனர். பின்னர் வனத்துறையினர் முதலையை பாதுகாப்பாக கொண்டு சென்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குளத்தில் விட்டனர்.

SCROLL FOR NEXT