விழுப்புரம் பாணாம்பட்டு கூட்டுச்சாலை யில் தீ வைக்கப்பட்ட தனியார் பேருந்து 
Regional02

விழுப்புரம் அருகே - தனியார் பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு : பேருந்துக்கு தீ வைப்பு

செய்திப்பிரிவு

விழுப்புரம் பாணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (30). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று இரவு பணிமுடிந்து வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார்.

பாணாம்பட்டு கூட்டுச்சாலையில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அர்ஜீனன் உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த அர்ஜூனன் உறவினர்கள் பேருந்தை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இத்தகவல் அறிந்த விழுப்புரம் நகர போலீஸார் நேரில் சென்று தீயை அணைத்தனர். பின்னர் அர்ஜூனனின்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT