Regional01

இளைஞரிடம்பண மோசடி :

செய்திப்பிரிவு

கமுதி அருகே காடமங்கலத்தைச் சேர்ந்தவர் கனீஷ்கர் (22). இவர் குறைந்த விலைக்கு மொபைல் போன் கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து, அதிலிருந்த வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டார்.

அப்போது பேசிய நபர், தன்னுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால் மொபைல் போன்களை அனுப்புவதாகத் தெரிவித்தார். இதை நம்பி 4 போன் வாங்குவதற்காக கனீஷ்கர் பணத்தை செலுத்தினார். ஆனால் போன்கள் கிடைக்கவில்லை. ரூ.98,600-ஐ தராமல் ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கனீஷ்கர் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT