Regional01

மதுரை விமான நிலையத்தில் - முதல்வருக்கு அமைச்சர்கள், திமுகவினர் வரவேற்பு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட மழை, வெள்ள பாதிப்பை ஆய்வு செய்து விட்டு, சென்னை செல்லும் வழி யில் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலை யத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து தனி விமானத்தில் தூத்துக்குடி சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் கார் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இரவு 7 மணிக்கு வந்தார். அவருடன் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர்.

விமான நிலையத்தில் அமைச் சர்கள் பி.மூர்த்தி, கயல்விழி செல்வராஜ், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், தமிழரசி, மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலர் மணிமாறன், நகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் மற் றும் ஆட்சியர் அனீஷ்சேகர், காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்றனர். பின்னர் விமானம் மூலம் சென்னை சென்றார்.

SCROLL FOR NEXT