Regional02

கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் :

செய்திப்பிரிவு

சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் ‘கபீர் புரஸ்கார் விருது’ பெற விண்ணப்பிக்கலாம், என திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.

இந்த விருது ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது. 2022-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப் பங்களை, "மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்" என்ற முகவரியில் டிசம்பர் 8-ம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT