Regional02

போலீஸாரை கத்தியால் குத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது :

செய்திப்பிரிவு

கொடைக்கானல் அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் சையது இப்ராகிம் (26). இவர் மூஞ்சிக்கல் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, வாகனத்தை நிறுத்த மறுத்து பணியில் இருந்த பெண் போலீஸாரை அவதூறாக பேசிவிட்டுச் சென்றார்.

இதுகுறித்து விசாரணை நடத்த சென்ற கொடைக்கானல் போலீஸார் சீனிவாசன், சின்னச்சாமி ஆகியோரை சையது இப்ராகிம் கத்தியால் குத்தினார். இவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் ஆட்சியர் ச.விசாகன் உத்தரவின்பேரில் சையது இப்ராகிமை குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT