Regional02

தடுப்பூசி செலுத்தாதோரை அனுமதிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை :

செய்திப்பிரிவு

தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் அறிக்கை: கரோனா பரவு வதைத் தடுக்கும் பொருட்டு இதற்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், மண்டபம், தங்கும் விடுதிகள், டீக்கடைகள், வங்கிகள், ஜவுளிக் கடைகள், பெட்ரோல் பங்குகள், ரேஷன் கடைகள், டாஸ்மாக், அலுவலகங்கள் போன்ற இடங்களில் அனுமதிக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தியதற்கான குறுஞ்செய்தி, சான்றிதழை உறுதி செய்த பிறகே அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT