Regional01

ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள் :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த ராயம்புரம் கிராமத்தில் உள்ள ஆலங்குளம் ஏரியில் நேற்று காலை மர்மமான முறையில் மீன்கள் இறந்து மிதக்கத் தொடங்கின. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு நோய்த் தொற்றுகள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

எனவே, ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், ஏரியில் உள்ள நீரை பரிசோதனை செய்யவும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT