Regional01

கரோனா தடுப்பு ஆலோசனை :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் புதியவகை கரோனா வைரஸ் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக் கைகள் தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் வே.விஷ்ணு பேசியதாவது:

புதிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை.

அதிக உடல் சோர்வு, தொண்டையில் வலி, மிதமான உடல் தசைவலி, இருமல், மிதமான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி தகுந்த சிகிச்சை பெறவேண்டும்.

பொதுமக்கள் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் விமானநிலையத் திலேயே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து 7 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தாமாகவே முன்வந்து கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT