நடிகர் அஜித்தை அவரது ரசிகர்களும் அபிமானிகளும் ‘தல’ என்று அழைத்து வருகின்றனர். அதேபோல் கிரிக்கெட் வீரர் தோனியையும் ‘தல’ என்ற அவரது ரசிகர்கள் பலரும் அழைத்து வருகின்றனர்.
இதனால் இந்த ‘தல’ என்ற அடைமொழிக்கு பொருத்தமானவர் யார் என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் தொடங்கப்பட்டு, பின்னர் அது கடும் வாக்குவாதமாகவும் மாறியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகநடிகர் அஜித் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இனிமேல் தன்னைக் குறிப்பிடும்போது வெறுமனேநடிகர் அஜித்குமார் அல்லது அஜித் என்று குறிப்பிட்டாலே போதுமானது. வேறு எந்தப் பட்டப் பெயரையும் பயன்படுத்த வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்மூலம் தோனிக்கு ‘தல’ என்கிற அடைமொழியை அஜித் விட்டுக் கொடுத்துவிட்டார் என்று சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதம் சூடுபிடித்துள்ளது.