திருப்பூர் மாநகராட்சியில் செல்லப்பபுரம் நடுநிலைப்பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளி நூலகத்துக்கு தேவையான பொதுஅறிவு புத்தகங்கள், விஞ்ஞானம், வரலாறு உட்பட பல்வேறு தலைப்பிலான புத்தகங்களை, திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கந்தசாமி வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியை புவனேஸ்வரி, புத்தகங்களை பெற்றுக்கொண்டார்.