திருப்பூர் செல்லப்பபுரம் நடுநிலைப்பள்ளி நூலகத்துக்கு தேவையான விஞ்ஞானம்,பொதுஅறிவு, வரலாறு உட்பட பல்வேறு தலைப்பிலான புத்தகங்களை, திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கந்தசாமி வழங்கினார். புத்தகங்களை பெற்றுக்கொண்ட பள்ளித் தலைமைஆசிரியை புவனேஸ்வரி, ‘‘பள்ளி நூலகத்துக்கு தேவையான புத்தகங்களை வழங்க தன்னார்வலர்கள் முன்வர வேண்டும்’ என தெரிவித்தார்.