Regional02

களப்பணியாளர்கள் 65 பேருக்கு சான்றிதழ் :

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித், பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதி களிலும், குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் ஆகிய நகராட்சிப் பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் கரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட 65 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் கவுரவித்தார்.

SCROLL FOR NEXT