Regional02

போதைப்பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி மற்றும் பேரணி :

செய்திப்பிரிவு

தருமபுரியில் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

போதைப் பொருட்கள், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் போன்றவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தருமபுரி மாவட்ட மதுவிலக்கு ஆயத் தீர்வுத் துறை சார்பில் நேற்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது. தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி இலக்கியம்பட்டி வரை சென்று நிறைவடைந்தது.

மேலும், இந்த விழிப் புணர்வு கலை நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்ட 10 ஒன்றியங்களிலும் தலா 3 இடங்கள் வீதம் 30 இடங்களில் நடத்திட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக ஆயத் தீர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT