சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கணினி வழி குற்றங்களில் சிறந்த முறையில் புலனாய்வு மேற்கொள்ள, அவர்களுக்கு ‘கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி’ வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முதல் கட்டமாக சென்னை கோட்டூர்புரம், மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று காலை பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.