Regional02

ஓடையில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு :

செய்திப்பிரிவு

இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரியும் ஊத்துக்கோட்டை, ரெட்டித் தெருவைச் சேர்ந்த ஷ்யாம்சுந்தர்(21) என்ற இளைஞர், நேற்று முன்தினம் தன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் மாம்பாக்கம் தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்த தேர்வாய் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள், நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஷ்யாம்சுந்தரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று சுமார் 100 மீட்டர் தொலைவில் ஓடையில் உள்ள முட்புதரில் ஷ்யாம்சுந்தரை சடலமாக மீட்டனர். பெரியபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT