Regional02

43 பவுன் நகை திருட்டு வழக்கில் 4 பேர் கைது :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் சுதர்சன் நகரில் வசிக்கும் ராஜு மனைவி கவிதா.இவர் கடந்த செப். 3-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு அசோக் நகரில்உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். திரும்பி வந்த பார்த்தபோது முன்பக்க கதவை உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 43 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக கவிதா, காஞ்சிபுரம் தாலுகா போலீஸில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த காவல் ஆய்வாளர் ராஜகோபால் தலைமையில் தனிப்படை அமைத்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி எம்.சுதாகர் உத்தரவிட்டார்.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இந்த திருட்டு வழக்கு தொடர்பாக சேலம், அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் மகன் மனோஜ்(35), திருப்புவனம், கீழடி பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் ராஜாராம், இவரது தம்பி கார்த்திக் ராஜா(24), நிலக்கோட்டை, சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்த திலிப் திவாகர்(26) ஆகியோரை கைது செய்தனர்.

போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி ரூ.17.50 லட்சம் மதிப்புள்ள, 43 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT