Regional01

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடக்கம் :

செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் எய்ட்ஸ் தடுப்புவிழிப்புணர்வு ஆதரவு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று ஆட்சியர் மோகன் தலைமையில் திருநங்கைகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் எய்ட்ஸ் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து விழிப்புணர்வு ஆதரவு கையெழுத்து இயக்கத்தினை ஆட்சியர் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்.

10 திருநங்கைகளுக்குஅரசின் அடையாள அட்டையி னையும், பாதிக்கப்பட்ட 25 நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார். பின்னர் திருநங்கைகள், பாதிக்கப்பட்டோர் மற்றும்அரசு அலுவலர்களுக்கு சமபந்தி விருந்து நடைபெற்றது.

கடலூர்

SCROLL FOR NEXT