புவனகிரியில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட விளைநிலங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர்.
புவனகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசா யிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்சார்பில் வட்டாட்சியர் அன்பழக னிடம் மனு கொடுத்து நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் கன மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த நெற்பயிர் கள் இதர பயிர்களை முழு கணக் கெடுப்பு செய்து ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க மாவட்டதுணைத்தலைவர் சதானந்தம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், நகர செயலாளர் மணவாளன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதே போல் இதே இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரசெயலாளர் ராஜேந்திரன் தலைமை யில் விளைநிலங்களுக்கு நிவார ணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் நிர்வாகிகள் கோவிந்தன், ராஜசேகர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.