Regional02

குவாரியை ஏலம் விடக்கோரி மகளிர் உண்ணாவிரதம் :

செய்திப்பிரிவு

தேனி ஆட்சியர் அலுவலகம் முன் கல் உடைக்கும் மகளிர் நலச்சங்கச் செயலாளர் கவுரி தலைமையில் தொழிலாளர்கள் உண்ணா விரதம் இருந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறு கையில், காமயக்கவுண்டன்பட்டியில் உள்ள கல் குவாரி யை முன்னுரிமை அடிப்படையில் நடத்த விண்ணப்பித்திருந்தோம். இன்னமும் இதற்கான ஏலத்தை இறுதி செய்ய வில்லை. இதனால் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர். வனத்துறை அனுமதிக்கான கடிதம் கோரப்பட்டுள்ளது. வந்ததும் ஏலம் நடத்தப்படும் என போலீஸார் கூறினர். இதைத் தொடர்ந்து பெண் தொழி லாளர்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT