நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உள்ளிட்டோர். 
Regional01

நாமக்கல்லில் தொழிலாளர்களுக்கு - ரூ.1.77 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் :

செய்திப்பிரிவு

நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் நலவாரிய தொழிலாளர்களுக்கு ரூ.1.77 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், 7,997 தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடியே 77 லட்சத்து 77 ஆயிரத்து 50 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.கதிரேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வி.ரமேஷ், சமூகபாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (பொ) பா.சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT