ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி பண்டாரம்பட்டியில் வாழை இலைகளை விரித்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய செம்பருத்தி மகளிர் குழுவினர். 
Regional02

ஸ்டெர்லைட்டை திறக்க கோரி பெண்கள் உண்ணாவிரதம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி மகளிர்குழுவினர், கிராம மக்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். தெற்கு வீரபாண்டியபுரம், பண்டாரம்பட்டி, அய்யனடைப்பு உள்ளிட்ட கிராமங்களில் மகளிர் குழுவினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அனைத்து கிராமங்களிலும் பெண்கள் சிலர் குழுக்களாக திரண்டு தங்களது வீடுகளுக்கு முன்பு அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்துள்ளது என்றும், அதை குறிக்கும் வகையில் காலி வழை இலைகளை விரித்து போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT