Regional01

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்து பேசும்போது, "பொதுமக்கள் மழைநீரை சேகரிக்க வேண்டும் என்பதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த அதி நவீன வீடியோ காட்சிகள் அடங்கிய வாகனம் ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்காக பிரச்சார பயணத்தை இன்று (நேற்று) தொடங்கியுள்ளது.

இந்த பிரச்சார வாகனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர்புறங்களுக்கு சென்று மழைநீர் சேகரிப்பு குறித்த பிரச்சாரத்தை ஏற்படுத்தும். டிசம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை முக்கிய இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மக்களுக்கு வழங்கப்படும்’"என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முகமதுஅஸ்லாம், நிர்வாக பொறியாளர் ஆறுமுகம், உதவி நிர்வாக பொறியாளர் திருமால், துணை நிலநீர் வல்லுநர் ராமன், உதவி நிலநீர் வல்லுநர் பரிதிமாற்கலைஞர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT