BackPg

என்ஆர்சி பதிவேடு மத்திய அரசு விளக்கம் :

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிப்பது பற்றி மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

காங்கிரஸ் உறுப்பினர் ஹிபி ஈடன் கேள்விக்கு மக்களவையில் நேற்று பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறும்போது, ‘‘குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) 2019- டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2020 ஜனவரி 10-ம்தேதி முதல் அமலில் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், சட்ட விதிகளை உருவாக்க கடந்த ஜூலை மாதம் மேலும் 6 மாதங்கள்மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது.இன்னும் சட்ட விதிகள் உருவாக்கப்படவில்லை. இந்த சட்டத்தின் விதிகள் வெளியிடப்பட்டவுடன் சட்ட வரம்பின் கீழ் வருபவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் என்ஆர்சி தயாரிப்பது பற்றி மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT