Regional02

மழை நீரை வெளியேற்றாததை கண்டித்து - மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், மானா மதுரை காட்டு உடைகுளம், கணபதிநகர் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தொடர் மழையால் உடைகுளம் கண்மாய் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. அப்பகுதிகளில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

20 நாட்களாகியும் வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக வட் டாட்சியர் தமிழரசன் உறுதி அளித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT