திருப்பத்தூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். அருகில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி. 
Regional02

தமிழகத்தில் சிறிய அளவிலேயே சேதம் : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கருத்து

செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் வருவாய்த் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் 348 பேருக்கு ரூ.56.50 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலு வலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் பிரபாகரன், வழங்கல் அலுவலர் ரத்தின வேல், ஒன்றியக் குழுத் தலைவர் சண்முகவடிவேல், மாவட்டக் கவுன்சிலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிறகு அமைச்சர் கூறுகை யில், வரலாறு காணாத மழை பெய்தும், தமிழகத்தில் சிறிய அளவிலேயே சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் எடுத்த தீவிர நடவடிக்கையே காரணம். உரத் தட்டுப்பாடு பிரச்சினை சீர் செய்யப்பட்டது என்றார்.

SCROLL FOR NEXT