Regional02

அலங்காநல்லூர் அருகே - கார் ஓட்டுநர் கொலை :

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் அருகே மெய்யப்பட்டி- கோட்டைமேடு செல்லும் வழியில் வயல் வெளியில் உள்ள கால்வாயில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இத்தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

மேலும், அவர் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகில் உள்ள காமாக்கா பட்டியைச் சேர்ந்த பாண்டியன்(40) என்பதும், கார் ஓட்டுநராக இருந்தார் எனவும் தெரிந்தது. கொலைக்கான காரணம், குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT