Regional02

நகை பறிப்பு வழக்கில் தூத்துக்குடி காவலர் கைது :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள நடுகூட்டுடன்காடு கிராமத்தைச்சேர்ந்தவர் பொன்செல்வி (40). இவர் நேற்றுமுன்தினம் அந்த பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், பொன்செல்வி அணிந்திருந்த தங்க நகையை பறிக்கமுயன்றுள்ளார். பொன்செல்வி கூச்சல் போடவே, அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் புதுக்கோட்டை அருகே உள்ள பொட்டலூரணியைச் சேர்ந்த ஆறுமுகப் பெருமாள் மகன் முத்துகுமார் (27) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். முத்துகுமார் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். முத்துக்குமாரின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT