TNadu

ஆட்சியர்களுடன் : தலைமைச் செயலர் : ஆலோசனை :

செய்திப்பிரிவு

ஒமைக்ரான் பாதிப்பை தடுப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு, அரசு தலைமைச் செயலர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி் மூலம் நடைபெற்ற கூட்டத்தில், ஒமைக்ரான் உருமாறிய கரோனா தொற்றின் பாதிப்புகளைத் தடுக்க கரோனா தடுப்பூசி மட்டுமே சிறந்த ஆயுதம் என்பதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டு்ம்.

இரண்டு தவணைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். கரோனா தொடர் தடுப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலர் கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT