Regional01

சென்னையில் 368 பகுதிகளில் மழைநீர் வடியவில்லை :

செய்திப்பிரிவு

சென்னையில் 524 பகுதிகளில் வெள்ளநீர் தேங்கிய நிலையில், நேற்றைய நிலவரப்படி அதில் 156 பகுதிகளில் நீர்அகற்றப்பட்டுள்ளது. இன்னும் 368பகுதிகளில் தேங்கிய நீர் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது. நீர் இறைக்கும் இயந்திரங்களின் எண்ணிக்கை 820-ல் இருந்து 918 ஆக உயர்த்தப்பட்டு, துரிதமாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் 46 ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அடைப்புகளை நீக்குதல், நீர் செல்லவழி ஏற்படுத்துதல் போன்ற பணிகளும் நடந்து வருகின்றன.

மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு6,551 புகார்கள் வந்து, அவற்றில் 1,666புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. சாலை சேதங்களை தற்காலிகமாக சரிசெய்யும் பணிகளையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

SCROLL FOR NEXT