கடலூர் விஎஸ்எல் நகரில் கன மழை பாதிப்புகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் மற்றும் சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்- செயலர் அன்சுல் மிஸ்ரா, ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
Regional01

கனமழை பாதிப்பு குறித்து கடலூர் நகரில் ஆய்வு :

செய்திப்பிரிவு

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், என்ஜிஓ நகர் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் பொக்லைன் இயந்திரங்கள் உதவி யுடன் மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை, கண்காணிப்பு அலுவலர் மற்றும் சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட விஎஸ்எல் நகர், தௌலத் நகர் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

SCROLL FOR NEXT