Regional02

அண்ணாமலை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிக்கான பாடத்திட்டம் வெளியீடு :

செய்திப்பிரிவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிக்கான பாடத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைவுப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர்,விழுப்புரம் கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் அமைந்துள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நிகழ் கல்வியாண்டில் இந்தக் கல்லூரிகளின் முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் பருவப் பாடத்திட்டம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இணைப்புக் கல்லூரிகள் அதே பாடத்திட்டத்தை பின்பற்று மாறு பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை பல்கலைக்கழக இணையதள முகவரியில் (https://annamalaiuniversity.ac.in/affcl/syllabus.php) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதலாமாண்டு மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பாடத்திட்டம் விரைவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஞானதேவன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT