தாண்டிக்குடி அருகே அரசுப் பேருந்து மீது விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். 
Regional01

தாண்டிக்குடி மலைச்சாலையில் மரம் சாய்ந்து அரசு பேருந்து சேதம் :

செய்திப்பிரிவு

பேருந்தில் ஓட்டுநர் கருப்பையா, நடத்துநர் ஞானசேகர் உள்ளிட்ட 12 பயணிகள் இருந்தனர். காமனூர் அருகே கொடலங்ககாடு என்ற இடத்தில் சென்றபோது திடீரென பேருந்து மீது பெரிய மரம் ஒன்று சாய்ந்தது. இதில் பேருந்தின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகள் நொறுங்கின. பயணி ஒருவர் லேசான காயமடைந்தார். தகவலறிந்த தாண்டிக்குடி போலீஸார், தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று மரத்தை அகற்றி பேருந்தை மீட்டனர்.

SCROLL FOR NEXT