கரோனா 3-வது அலை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று நடைபெற்ற 12-வது கட்ட மெகா முகாமில் மக்கள் ஆர்வமாகப் பங்கேற்று கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
இது தொடர்பாக அமைச்சர்மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும்முக்கிய இடங்களில் நேற்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
ஏறத்தாழ 18 மாவட்டங்களில் மழை பெய்தபோதும் 16 லட்சத்து 5 ஆயிரத்து 293 பேருக்கு கரோனாதடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 7 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
736 பேருக்கு கரோனா
இதுவரை சென்னையில் 5 லட்சத்து 48 ஆயிரத்து 23 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 26 லட்சத்து 80 ஆயிரத்து 667 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றுமட்டும் சென்னையில் 110, கோவையில் 117 உட்பட மொத்தம் 772 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர்.