Regional01

ஈரோட்டில் காங்கிரஸார் விழிப்புணர்வு பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஈரோட்டில்காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா, பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

பவானி பிரதான சாலையில் தொடங்கிய பிரச்சாரப் பயணம் வீரப்பன்சத்திரத்தில் நிறைவடைந்தது. அங்கு நடந்த கண்டன கூட்டத்தில், காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் சரவணகுமார், செல்வகுமார் உள்ளிட்டோர் பேசினர். பிரச்சார நிகழ்வில், மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், செந்தூர், பாட்ஷா, முகமது அர்சத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT